Google Gemini Live புதுப்பிப்பு
Google நிறுவனம் தனது AI உதவியாளர் Gemini Live க்கான புதிய update ஒன்றை வெளியிட்டு, பயனர்களின் கடந்த உரையாடல்கள் (Past Chats) மற்றும் Connected Apps வழியாக பெறப்படும் தகவல்களை பயன்படுத்தும் திறனை சேர்த்துள்ளது. இந்த மாற்றத்தின் மூலம் Gemini Live முன் உரையாடல்களில் சேமிக்கப்பட்ட தகவல்களை பயன்படுத்தி மேலும் தனிப்பயனாக்கப்பட்ட மற்றும் பயனுள்ள பதில்களை வழங்க முடியும். Google I/O 2026 விழாவில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய Gemini அனுபவத்துடன் Voice மற்றும் Text உரையாடல்களுக்கு இடையில் விரைவான மாற்றம் செய்யும் திறனும் வழங்கப்பட்டது. மேலும் YouTube, Google Workspace, Utilities, Image Generation போன்ற Connected Apps உடன் கூடுதல் ஒருங்கிணைப்பு Gemini Live இற்கு சேர்க்கப்பட்டுள்ளது. இருப்பினும், Google Messages உடன் நேரடி இணைப்பு இன்னும் வழங்கப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Google இன் படி, Gemini Live பயன்படுத்தும் போது சாதாரண Gemini Chat க்கான Privacy மற்றும் Permission அமைப்புகள் செயல்படும் மற்றும் பயனர் அனுமதித்த Memory தகவல்களை மட்டுமே பயன்படுத்தும். தற்போது இந்த வசதி அமெரிக்காவில் உள்ள ஆங்கிலம் பேசும் பயனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. Google மேலும் கூறுகிறது Gemini பயனர்களால் குறிப்பிடப்படும் முக்கிய தகவல்கள், உதாரணமாக உணவு பழக்கம், குடும்ப சிறப்பு தினங்கள் அல்லது பொழுதுபோக்கு போன்றவை பாதுகாப்பாக நினைவில் வைக்கப்பட்டு, எதிர்கால உரையாடல்களில் மீண்டும் கேட்காமல் மேலும் தொடர்புடைய பதில்களை வழங்க முடியும். இருப்பினும், Android சாதனங்களில் Gemini இன் Personal Intelligence Settings பக்கத்தில் இன்னும் “Memory for Live - Coming Soon” என குறிக்கப்பட்டுள்ளது மற்றும் இந்த வசதி அனைத்து பயனர்களுக்கும் கிடைக்க இன்னும் சில காலம் ஆகலாம் என தெரிகிறது.
Comments (0)
Please login to comment