Big Tech மீது EU கடும் நடவடிக்கை
ஐரோப்பிய ஒன்றியம் (European Union) தற்போது Google, Apple, Microsoft, Amazon, X போன்ற பெரிய Big Tech நிறுவனங்களின் அதிகாரத்தை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் முக்கிய நோக்கம் பயனர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதும், இணையத்தில் உள்ள harmful content-ஐ கட்டுப்படுத்துவதுமாகும். இதில் data regulation, online content safety மற்றும் monopoly நடத்தை போன்ற விடயங்கள் முக்கியமாக இடம்பெறுகின்றன.

இதன் ஒரு பகுதியாக, Google, Meta, X (முன்னர் Twitter) போன்ற நிறுவனங்களுக்கு EU பெரிய அளவில் அபராதங்களை விதிக்க தொடங்கியுள்ளது. இதில் குறிப்பிடத்தக்கதாக, Elon Musk-க்கு சொந்தமான X platform-க்கு €120 million அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. harmful content-ஐ சரியான முறையில் கட்டுப்படுத்தத் தவறியதே இதற்கான காரணம் என EU தெரிவிக்கிறது. Big Tech நிறுவனங்கள் ஐரோப்பிய சட்டங்களை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்றும் EU வலியுறுத்துகிறது. இதற்கு பதிலளித்த Donald Trump, EU சட்டங்கள் US நிறுவனங்களுக்கு தேவையற்ற அழுத்தத்தை ஏற்படுத்துவதுடன், அமெரிக்க தொழில்நுட்ப பொருளாதாரத்திற்கு பாதகமாக இருப்பதாக கூறியுள்ளார். மேலும், சுமார் மூன்று மாதங்களுக்கு முன் Google நிறுவனத்திற்கு online advertising market-இல் monopoly நடத்தை காரணமாக €2.9 billion அபராதம் விதிக்கப்பட்டது.
Comments (0)
Please login to comment